இலங்கையில் 1004 கைதிகளுக்கு விடுதலை வழங்கிய ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் 1004 கைதிகளுக்கு விடுதலை வழங்கி அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-12-25 17:59 GMT

ரணில் விக்ரமசிங்கே.

நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு சென்றதால் மக்கள் புரட்சி வெடித்தது. அப்போது அங்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, அவரது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தினால் அவர்கள் நாடு தப்பினார்கள்.

இந்த இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபரானார்.இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்துள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News