வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-08-12 15:30 GMT

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

'தாக்குதல்கள் பற்றிய செய்தி கவலையளிக்கிறது', என வங்கதேச இந்துக்கள் குறித்து பிரியங்கா காந்தி கூறினார். மதத்தின் அடிப்படையில் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர்கள் போராட்டம் வன்முறை கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அமைப்பினர் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகவேண்டும், நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என போராட்டம் நடத்தியதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

தற்போது வங்காள தேசத்தில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் அங்கு கலவரம் ஓய்ந்த பாடில்லை. அந்நாட்டின் சிறுபான்மை மக்களான இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள். அவர்கள் வழிபடும் கோவில்கள்  மற்றும் இந்துக்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா இன்று திங்கட்கிழமை கவலை தெரிவித்தார். அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய செய்தி கவலையளிக்கிறது. மதம், ஜாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், வங்காளதேசத்தின் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்றும் பிரியங்கா கூறினார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களை பின்பற்றும் மக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மதம், சாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் கூறினார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி கவிழ்ந்ததில் இருந்து, அங்கு இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து பிரியங்கா காந்தி, 'எக்ஸ்' பதிவில், "அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய செய்தி கவலை அளிக்கிறது. மதம், சாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

பங்களாதேஷில் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்றும், இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களை பின்பற்றும் மக்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் அங்குள்ள இடைக்கால அரசு உறுதி செய்யும் என்று தான் நம்புவதாக பிரியங்கா கூறினார்.

Tags:    

Similar News