ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் உடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்ற பிரதமர் மோடிக்கு ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் கூட்டமைப்புக் குடியரசின் பிரதமர் மேன்மை தாங்கிய ஓலஃப் ஷோல்சுடன் இன்று இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இந்தியா – ஜெர்மனி இடையே, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசுகளுக்கு இடையேயான ஆறாவது சுற்று ஆலோசனைகளுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஜெர்மனி பிரதமர் மாளிகை வளாகத்தில், பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் ஷோல்ஸ், அன்புடன் வரவேற்றார். இதன் பின்னர் இருதலைவர்களும் நேருக்கு நேர் என்ற முறையில் சந்தித்தனர். இதைத் தொடர்ந்து தூதுக்குழு நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துதல், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 6-வது இந்திய-ஜெர்மன் அரசுகளுக்கிடையேயான உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.