பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கிடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை.;
இருதரப்பு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது குறித்து ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் தான்டெஹான் உடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காணொலி காட்சி வாயிலாக 21 டிசம்பர் 2021 அன்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பிலும் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டியதுடன், இடைக்கால ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர். அந்த வகையில், இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மிகவும் முன்னேற்றகரமாக நடந்து வருவது குறித்து இரு அமைச்சர்களும் பாராட்டுத் தெரிவித்ததுடன், பேச்சுவார்த்தைகளை மேலும் விரிவாக மேற்கொள்ள முடிவு செய்ததுடன், விரிவான உடன்படிக்கை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுப்படுத்துமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
.இருநாட்டுப் பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு பயனளிக்கக் கூடிய சமச்சீரான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.