விலையேறப்போகுது பெட்ரோல், டீசல்: கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலர் உயர்ந்துள்ளது.

Update: 2022-02-24 05:00 GMT

அண்டை நாடான உக்ரைன் மீது, பலம் வாய்ந்த ரஷ்யா, இன்று காலை போரை தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டின் பல நகரங்களை குறிவைத்து, ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனிடையே, போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன. உடனடியாக, கச்சா எண்ணெய் விலையை இது பாதித்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலின் விலை 100 டாலராக உயர்ந்தது. கச்சா எண்ணெயின் விலை 2014 ஆம் ஆண்டிற்கு பின், தற்போது 100 டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 3 மாதங்களுக்கு மேலாக, பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. தேர்தல் காரணமாக உயர்த்தப்படாமல் வந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது.

தங்கம் விலையும் உயர்வு

ரஷ்யாவின் தாக்குதலால், தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.108 உயர்ந்து, சவரன் ஒன்றுக்கு ரூ. 864 அதிகரித்துள்ளது.வெள்ளி விலை, கிராமுக்கு ரூ. 1.90 அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News