இன்று காலை ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி ஒன்ராறியோவில் புதிதாக 4,456 தொற்றுக்களை பதிவு செய்தது. இது தோற்று பரவ ஆரம்பித்த பின்னர் பதிவாகிய அதிக அளவிலான தொற்றுகள் ஆகும். இதற்கு முன்னர் ஜனவரி 8 ஆம் தேதி 4,249 தொற்றுக்களை ஒன்ராறியோ பதிவு செய்து இருந்தது. 21 புதிய தொற்றுகளையும் அது பதிவு செய்திருந்தது.
ஒன்ராறியோவில் புதிதாக 94,794 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது-இவற்றையும் சேர்த்து சனிக்கிழமை மாலை 8 மணிவரை வரை மொத்தம் 3,139,743 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளை 333,150 பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளார்கள்.
தற்பொழுது 1513 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள், அதில் அவரச சிகிச்சை பெற்றுவரும் 605 பெரும் அடங்கும். 382 பேர் சுவாசகருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.