ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி: சவுதி அரேபியா
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு தெரித்துள்ளது.
இஸ்லாமியர்கள், தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று விரும்பக்கூடிய இரம் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா.
அரசும் இந்த புனித பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் அடங்குவர்.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) ஹஜ் புனித பயணம் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த ஆண்டுக்கான புனித பயணம் தொடர்பாக சவுதி அரேபியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.