நாசா புதிய கோளை கண்டுபிடித்துள்ளது

Update: 2021-06-13 12:22 GMT

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் 'டிஓஐ 1231 பி' (TOI-1231 b) என்கிற புதிய கோளை கண்டுபிடித்தது. இந்த கோள் பூமியை விட மூன்றரை மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது. அது நெப்டியூன் கோளின் மறு உருவம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளில் பூமியைப் போலவே தண்ணீர் மற்றும் மேகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோள் 'ரெட் டுவார்ஃப்' எனப்படும் சிவப்பு குள்ளன் என்கிற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது என்றும், சூரியனை விட அளவில் சிறியதான இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரத்திற்கு சூரியனைவிட வயது அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



Similar News