நியூசிலாந்தில் கொரானா பரவல் அதிகரிப்பு
நியூசிலாந்தில் கடந்த ஆறு வாரங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.;
டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஆக்லாந்தில் உள்ள சுமார் 1.7 மில்லியன் மக்கள் திங்கள்கிழமை வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நியூசிலாந்தில் ஆறு வாரங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் மிகப்பெரிய அதிகரிப்பை வியாழனன்று அறிவித்தது. இந்த அனைத்து பாதிப்புகளும் ஆக்லாந்தில் கண்டறியப்பட்டன. இதன் காரணமாக ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆக்லாந்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு எதிர்பாராதது அல்ல, மக்கள் சட்டவிரோத வீட்டு கூட்டங்களில் பங்கேற்கின்றனர் என துணைப் பிரதமர் கிராண்ட் ராபர்ட்சன் கூறினார்.
ஆக்லாந்தில் உள்ளவர்கள் வசிப்பவர்கள் வெளியே செல்ல அவசர காரணங்கள் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் .
தற்போது மொத்தம் 71 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, ஒரு நாள் முன்பு 55 ஆக இருந்தது. "இன்றைய புதிய தொற்று பரவல் எதிர்பாராதது இல்லை, என்று பொது சுகாதார இயக்குனர் கூறினார்.
சுமார் 2.49 மில்லியன் நியூசிலாந்து மக்கள் அதாவது, சுமார் 59%, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 90% தடுப்பூசி போடப்பட்டவுடன் ஊரடங்கை நீக்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். சனிக்கிழமை தடுப்பூசி இயக்கத்தின் போது ஒரே நாளில் 100,000 டோஸ்களை போட்டுள்ளனர்.
டெல்டா வெடித்தாலும் கூட, நியூசிலாந்தில் 4,472 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றில் 28 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் விட மிகக் குறைவு.