சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டு பிடிப்பு: நேரடியாக மூளையை சேதப்படுத்தும்

நேரடியாக மூளையை சேதப்படுத்தும் புதிய வகை வைரஸ் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-09-08 13:00 GMT

சீனாவில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டது. இது நேரடியாக மூளையை சேதப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

கொரோனா எனும் கொடிய நோயை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு சீனா. சீனாவில் உகான் மாநிலத்தில் உருவான கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவி சுமார் இரண்டாண்டுகளில் லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. பல நாடுகள் கொரோனாவில் வீழ்ந்த பொருளாதாரத்தில் இருந்து இன்னும் எழும்ப முடியாமல் உள்ளன.

இந்த நிலையில் தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் உள் மங்கோலியாவில் உள்ள ஈரநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவருக்கு காய்ச்சல் தொடங்குகிறது. சில நேரங்களில் அது மிகவும் ஆபத்தானதாக மாறி மூளையை நேரடியாக பாதிக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி கோமா நிலைக்கு கூட சென்றுள்ளார்.

கொரோனா வைரஸுக்குப் பிறகு, சீனாவில் ஒரு புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 2019 இல் சீனாவின் உள் மங்கோலியாவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டிக் கடித்தால் மனிதர்களுக்கு பரவுகிறது. 2019 இல், சீனாவின் ஜின்ஜோ நகரில் 61 வயது நபர் திடீரென நோய்வாய்ப்பட்டார். இவரை ஐந்து நாட்களுக்கு முன் உண்ணி கடித்துள்ளது. விசாரணையில் அவருக்கு ஆர்த்தோநியூரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த வைரஸ் மூளையையும் பாதிக்கிறது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வைரஸுக்கு வெட்லேண்ட் வைரஸ் (WELV) என்று பெயரிட்டுள்ளது. இது தவிர, உண்ணி கடித்ததால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளும் கண்காணிக்கப்பட்டனர். வெட்லேண்ட் வைரஸ் நவோரோவிரிடே குடும்பத்தில் உள்ள ஆர்த்தோனேரோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது மற்றும் டிக் மூலம் பரவும் ஹசாரா ஆர்த்தோனெரோவைரஸ் ஜெனோகுரூப்புடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும்.

இந்த வைரஸ் காய்ச்சலுடன் தொடர்புடையது. இந்த வைரஸ் சீனாவில் சுமார் 17 நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைச்சுற்றல், தலைவலி, உடல்நலக்குறைவு, மூட்டுவலி மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகள் இந்த நோயாளிகளிடம் காணப்பட்டன. ஒரு நோயாளிக்கு நரம்பியல் அறிகுறிகளும் இருந்தன.

ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதியில் உள்ள வனப் பாதுகாவலர்களிடமிருந்து இரத்த மாதிரிகளையும் ஆய்வு செய்தனர். ஈரநில வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் சுமார் 640 பேரில் 12 பேரில் மட்டுமே காணப்பட்டன. ஒரு நோயாளியும் கோமா நிலைக்குச் சென்றார். இருப்பினும், சிகிச்சைக்குப் பிறகு அனைத்து நோயாளிகளும் குணமடைந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

Tags:    

Similar News