100 மேற்பட்டோரை சுட்டுக் கொன்ற மியான்மார் இராணுவ சர்வாதிகாரம்

Update: 2021-03-28 06:15 GMT

மியான்மரின் ஆயுதப்படை தினத்தை கொண்டாட  இருப்பதால், அதற்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலையில் அல்லது பின்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என நேற்று இராணுவ சர்வாதிகாரம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், அரசுத் தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்கவும், ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பது படையினர் துப்பாக்கி சுடு நடத்தியுள்ளனர்.அதில் குறைந்தது 100 நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக இதுவரையிலான தகவல் வெளியாகியுள்ளது.



  

இந்நினையில், மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று உண்மையில் வெட்கக்கேடான நாள் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட போராட்டக் குழுவான CRPH-ன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த 76 வது மியான்மர் ஆயுதப்படை நாள் பயங்கரவாத மற்றும் அவமதிப்பு நாளாக பொறிக்கப்பட்டிருக்கும் என்று மியான்மருக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் உட்பட நிராயுதபாணியான பொதுமக்கள் கொல்லப்படுவது மறுக்க முடியாத செயல்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News