Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,000 பேர் உயிரிழப்பு

Afghanistan Earthquake:மேற்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-10-08 06:26 GMT

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்கள் மீட்கும் காட்சி.

Afghanistan Earthquake: மேற்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 465 வீடுகள் அழிந்துள்ளதாகவும்,135 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பேரிடர் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்லா ஜான் கூறுகையில், "சிலர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்வதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூட்டாளிகளும் உள்ளூர் அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

ஹெராத் மாகாணத்தில் உள்ள ஜெண்டா ஜான் மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்கள் நிலநடுக்கம் மற்றும் பின் அதிர்வுகளின் தாக்கத்தை சந்தித்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 6.3, 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவுள்ள மூன்று மிக வலுவான பின்அதிர்வுகளும், குறைந்த அதிர்ச்சிகளும் ஏற்பட்டன.

Tags:    

Similar News