தேவை ராணுவ நடவடிக்கை: மோடிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ எழுதிய பகிரங்க கடிதம்
வங்கதேசம் மீது இந்திரா காந்தி போல் ராணுவ நடவடிக்கை தேவை என்று மோடிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பகிரங்க கடிதம் எழுதி உள்ளார்.;
'இந்திராவைப் போல் பிரதமர் மோடி செயல்பட வேண்டும்', வங்கதேசம் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம் எழுதி உள்ளார்.
வங்க தேசத்தில் இட ஒதுக்கீட்டிற்காக எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தை அடக்கிய ராணுவம் ஆட்சியை பிடித்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கலவரத்தை அடக்க முடியாத ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைந்து உள்ளார்.
வங்கதேசத்தில் தற்போது சிறுபான்மையினருக்கு அதாவது இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நடந்து வருகிறது. உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. ஆனால் ஷேக் ஹசீனாவிற்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியாவோ சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் வன்முறை செயல்களுக்கு எதிராக இதுவரை உறுதியான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
இந்த அட்டூழியங்களுக்கு மத்தியில், கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 1971-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு இணையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷாத் என்ற அந்த எம்எல்ஏகடிதம் எழுதியுள்ளார். இந்து சிறுபான்மையினர் மீது நடக்கும் கொடுமைகள் குறித்தும் அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.
வங்கதேச அரசியல் குழப்பம் மற்றும் இந்து சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியைப் போல உறுதியான ராணுவ நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தயங்கக் கூடாது என்று கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் புதன்கிழமை கூறினார்.
1971ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையை போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூரு சிவாஜிநகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் 'இந்தியாவின் அக்கறையுள்ள குடிமகனாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.வங்காளதேசத்தில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் சமீபத்திய செய்திகள் மற்றும் வீடியோக்களால் மிகுந்த மனவேதனை அடைந்து, அக்கறையுள்ள இந்தியக் குடிமகனாக இன்று உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் மற்றும் இப்பகுதியில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
பங்களாதேஷில் மட்டுமின்றி இந்தியாவிலும் 'வலதுசாரிகளின் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளான' சிறுபான்மையினரின் கவலைகளை நிவர்த்தி செய்ய 'தீர்மானமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் இந்த அறிக்கைகள் உண்மையாக இருந்தால், இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா ஒரு 'செயல்திறன் நிலைப்பாட்டை' எடுக்க வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ கூறினார். பங்களாதேஷில் உள்ள இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் மிகுந்த அக்கறைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும் என்று ரிஸ்வான் அர்ஷாத் கூறினார், அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்ய புதிய வங்காளதேச அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதமரை சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் வலதுசாரி சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் கையாளுபவர்கள் இது போன்ற செய்திகளை பரப்புகிறார்கள், இது உண்மையாக இருந்தால் (பல போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது), இந்த அறிக்கைகள்/வீடியோக்களின் நம்பகத்தன்மையை கண்டறியுமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய மக்கள் எப்போதும் நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்று அர்ஷத் தனது கடிதத்தில், "எங்கள் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியைப் போல நீங்கள் தீர்க்கமான இராணுவ நடவடிக்கை எடுக்க முடியும். இந்த இக்கட்டான காலங்களில் வங்காளதேசத்தில் உள்ள நமது இந்து சகோதர சகோதரிகளுக்கு உதவ உங்கள் மரியாதைக்குரிய நிலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வங்கதேசத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் உள்ள சிறுபான்மையினரின் கவலைகளை நிவர்த்தி செய்ய உங்களது தலைமையின் கீழ் இந்தியா தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் மேலும் கூறி உள்ளார்.