மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஆண்ட்ரியா மெசா முதலிடம்
அழகு என்பது நாம் பார்க்கும் முறை மட்டுமல்ல, நம் இதயத்திலும், நம்மை நாமே நடத்தும் விதத்திலும் இருக்கிறது -ஆண்ட்ரியா மெசா.;
மிஸ் யுனிவர்ஸ் போட்டி, அமெரிக்காவின் புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் நடைபெற்றது.
கொரோனா தாக்கம் மிகுந்த காலத்திலும், அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நேற்று நடந்தது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் முதலிடத்தை மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வென்றார்.
2021 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்ஸிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வென்றார். மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்றவர் ஆண்ட்ரியா மெசா, போட்டி இறுதி சுற்றின் போது இவர் பேசிய உரை அனைவரையும் கவர்ந்தது. அழகு என்பது நாம் பார்க்கும் முறை மட்டுமல்ல, நம் இதயத்திலும், நம்மை நாமே நடத்தும் விதத்திலும் இருக்கிறது என்று அவர் பேசியது அனைவரிடமும் வரவேற்ப்பை பெற்றது.
அழகாக பேசியதோடு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று, மெக்ஸிகோவிற்கு மூன்றாவது முறையாக பெருமையை சேர்த்துள்ளார்.