மெக்சிகோவில் கல்லறையில் குவியும் சடலங்கள்

Update: 2021-03-27 11:30 GMT

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகள் உள்ளன. அதில், அமெரிக்காவில் 5 லட்சத்தும் அதிகமான மக்களும், பிரேசிலில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதாக கூறப்படுகின்றது,இந்த நிலையில் மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.அத்துடன் கல்லறைக்கு தினமும் உயிரிழந்தோரின் உடல்கள் அடுத்தடுத்து வருவதனால் அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

உலகளவில் இதுவரை 125 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2.75 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.தற்போது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News