சர்வதேச மாதவிடாய் சுகாதார தினம் இன்று 🔞

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும்.

Update: 2021-05-28 02:10 GMT

மாதவிடாய் சுகாதார நாள்...

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும். மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

2014 இல் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான "வாஷ்" யுனைட்டெட் (WASH United) தொடங்கப்பட்டு, 270 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஒத்த அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது. உலகக் கைகழுவும் நாள் (அக்டோபர் 15), உலகக் கழிவறை நாள் (நவம்பர் 19) போன்றவற்றுடன் மாதவிடாய் சுகாதார நாளும் துப்புரவு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நாட்களுள் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெண்களின் மாதவிடாய் கால அளவு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5 நாட்கள் என்பதையும் மாதவிடாய் சுழற்சியின் தோராய அளவு 28 நாட்கள் என்பதையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டின் 5 ஆவது மாதமான மே மாதத்தின் 28 ( '28/5' ) ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில், மாதவிடாயின் போது எப்படி பெண்கள் சுகாதாரமாக இருப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது.

பெண்களுக்கு மூன்று நாள் மாதவிடாய் என்பது தவிர்க்க முடியாதது. வலிகளைத் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் அங்கிருந்துதான் பெண்களுக்குத் தொடங்கியதோ என்கிற எண்ணமும் தோன்றும். அந்த அளவிற்கு முதல் நாள் வலியைப் பொருத்துக் கொண்டு அன்றாட வேலைகளையும் சமாளிப்பார்கள்.

பெண்கள் அந்த நாட்களில் தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்வதும் அவசியம். இருப்பினும் சிலர் பாதுகாப்பாக இருப்பதில்லை. அதை வலியுறுத்தவே மாதவிடாய் சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.எவ்வாறெல்லாம் அந்த மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வே இந்தக் கட்டுரை.

இந்த விழிப்புணர்வில் எதை பற்றியெல்லாம் பேசப்படுகிறது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.


விழிப்புணர்வு பிரச்சாரத்தின் குறிக்கோள்:

1. மாதவிடாயின் போது பெண்கள் சந்திக்கும் சிரம நிலைகளை விவாதிப்பது.

2. அந்த சிரமத்தை அவர்கள் கடந்து நேர்மறை எண்ணத்தை மனதில் எப்படி விதைப்பது?

3. பெண்களுக்கான ஆதரவு குழுக்கள் எங்கெல்லாம் இருக்கிறது? (குறிப்பாக மாதவிடாய் பிரச்சனைக்கு குரல் கொடுக்க)

4. மாதவிடாய் விழிப்புணர்வை மற்றவர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது?

5. சமூகத்தில் இதற்கான விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது?

இத்தகைய விவாதமெல்லாம் இந்த நாளில் மற்றவர்கள் மனதில் விதைக்கப்பட, இதனால்… மகளிர் கொள்ளும் மாதவிடாயின் சிரமங்கள் மற்றவர்களுக்கும் தெரியவருகிறது.

இந்த மாதவிடாய் விழிப்புணர்வு நாள் என்பது 28ஆம் தேதி மே மாதம், 2014 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

விளைந்த நன்மைகள்:

1. 2017ஆம் ஆண்டு, மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வில் மக்கள் அதிகமாக கவனம் செலுத்திய ஆண்டாக அமைந்திருக்கிறதுa.

2. இதுவரை ஒட்டுமொத்தமாக 54 நாடுகள் தங்களுடைய ஒத்துழைப்பை தர, இதனால் 350 நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது.

3. இந்த நிகழ்வுகளும்… பல பள்ளிகள், சமூக பேரணிகள், விழிப்புணர்வு மேடைகள் என பல பொது இடங்களில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமை மிக்க விஷயம்.

இந்த மாதவிடாய் பற்றி அறியாதவர்கள் தான் அதிகம் என்றால், அதற்கான முயற்சியின் மூலமாக இந்த நாளை பற்றிய விழிப்புணர்வை நாமும் நாலு பேருக்கு ஏற்படுத்தலாம்.

மாதவிடாய் என்பது பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. அவளுக்கு உடல் அளவில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளை விட, மனதளவில் ஏற்படக்கூடிய தொந்தரவு என்பது தான் இந்நாளில் அதிகம். அந்த தொந்தரவை போக்க, சரியான உணவு முறையும்… தவிர்க்க வேண்டிய ஒரு சில விஷயங்களும் மிகவும் முக்கியமான ஒன்று.

ஆனால், மாதவிடாய் என்பதை விலக்காய் மட்டுமே பார்க்க தொடங்கியதால் உடல் வலியுடன் சேர்த்து… மன வலியையும் ஒரு பெண் அனுபவிக்கிறாள் என்பதே உண்மை. எனவே, மற்ற நாட்களை காட்டிலும் இந்த மே மாதம் 28ஆம் தேதி, நீங்களும் இது போல் விழிப்புணர்வில் கலந்துக்கொண்டு பெண்கள் படும் கடினத்தையும், அதை கடப்பதற்கான வழியையும் பகிர்ந்துக்கொள்ள… மாதவிடாய் என்பது மாதந்தோறும் வந்தாலும், மற்றவர்களும் எது தேவை என்பதை புரிந்து வாழ்வில் முன் நோக்கி செல்வர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


Tags:    

Similar News