பூமியை நோக்கி வரும் விமானம் அளவிலான விண்கல்

ஒரு பெரிய விமானம் அளவிலான விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அது இன்று பூமியை அடையலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது

Update: 2022-08-29 03:02 GMT

பூமியை நோக்கி வரும் விண்கல்

பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல் இன்று பூமியை வந்தடையக்கூடும். விமானத்தின் அளவுள்ள இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் வரும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.விண்கல் ஆகஸ்ட் 29, 3:25 am IST அன்று பூமியைக் கடந்து செல்லும். அப்போது பூமிக்கு 5.51 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கல் வினாடிக்கு 7.93 கிமீ வேகம் கொண்டதாக நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் (சிஎன்இஓஎஸ்) உறுதி செய்தது. இந்த விண்கல் பூமிக்கு அருகாமையில் இருப்பதால், "சாத்தியமான அபாயகரமான பொருளாக" குறிப்பிடப்பட்டுள்ளது.

NEO 2022 QQ4 என்ற விண்கல் சனிக்கிழமையன்று பூமியைக் கடந்த பிறகு 5.93 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தற்போது வினாடிக்கு 7.23 கிமீ வேகத்தில் நகர்கிறது.

விண்கற்கள் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் பாறைத் துண்டுகளாகும். இந்த பாறைத் துண்டுகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பதற்காக, அதன் அசல் பாதையில் இருந்து திசைதிருப்ப நாசா அதன் DART (இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை) விண்கலத்தை ஏவியுள்ளது

Tags:    

Similar News