லாட்டரியில் ரூ. 200 கோடி சம்பாதித்த வயது முதிர்ந்த அமெரிக்க தம்பதியினர்

லாட்டரியில் ரூ. 200 கோடி சம்பாதித்த வயது முதிர்ந்த அமெரிக்க தம்பதியினர் பற்றிய தகவல் கிடைத்து உள்ளது.;

Update: 2024-01-08 13:58 GMT

லாட்டரியில் ரூ.200 கோடி சம்பாதித்த அமெரிக்க தம்பதியினர்.

அமெரிக்காவைச் சேர்ந்த வயதான தம்பதியினர் ஒரே ஒரு சின்ன டிரிக்கை பயன்படுத்தி லாட்டரியில் ₹ 200 கோடியை அசால்டாக வென்றுள்ளனர். இதை அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் பிற மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் லாட்டரி இருக்கிறது. இந்த லாட்டரியில் பலர் ஒரே இரவில் கோடிகளிலும் கூட புரள்கிறார்கள்.

அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஆனால், இவர்களுக்கு ஜாக்பாட் எல்லாம் அடிக்கவில்லை... அப்படி இருக்க 200 கோடியை எப்படிச் சம்பாதித்தார்கள் எனக் கேட்கிறீர்களா.. வாங்க அது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தம்பதியினர் லாட்டரி முறையில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி சுமார் ₹ 200 கோடி அசாட்லாக வென்றுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் வயதான தம்பதி ஜெர்ரி (வயது 80) மற்றும் மார்ஜ் செல்பீ (81 வயது) ஆகியோர் இணைந்து தான் இதைச் செய்துள்ளனர். அவர்களுக்குக் கணிதம் எளிதாக வரும் என்பதால் அதை வைத்தே இந்த லாட்டரியை அள்ளியுள்ளனர். மார்ஜ் செல்பீ அருகே ஒரு கடையை நடத்தி வந்துள்ளார், 60 வயதான பிறகு அவர் அந்த கடையை விற்றுவிட்டு ஓய்வுக் காலத்தை என்ஜாய் செய்து வந்துள்ளார். அப்போது தான் 2003இல் அவர் புதிய லாட்டரி விளையாட்டிற்கான விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அதை பார்த்த உடனேயே அதில் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய கணித பிழை இருப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த லாட்டரி விதிகளின் படி ஜாக்பாட் தொகை 5 மில்லியனை அடைந்தும் அதை யாரும் வெல்ல முடியாமல் போனால், அடுத்தகட்ட வெற்றியாளர்களுக்கு இந்த தொகை பகிர்ந்து அளிக்கப்படும் என விதி இருந்தது. இந்த விதியே இவர்கள் 200 கோடி அள்ளக் காரணமாக இருந்தது. தனது கணித மூளையை வைத்துக் கணக்குப்போட்ட மார்ஜ் செல்பீ, குறிப்பிட்ட எண்ணிக்கையில் லாட்டரியை வாங்கினால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும் என்பதைக் கணித்துள்ளார்.

1100 டாலர்கள் செலவழித்து 1,100 லாட்டரி டிக்கெட்களை வாங்கினால், அதில் நான்கு-எண் வெற்றி சீட் கண்டிப்பாக ஏதாவது ஒன்றாக இருக்கும் இதன் மூலம் அவருக்கு 1000 டாலர் கிடைக்கும்.. அதேபோல மூன்று எண் வெற்றி சீட் குறைந்தது 18 அல்லது 19 அவரது லாட்டரியில் கண்டிப்பாக இருக்கும். இதன் மூலம் அவருக்கு 900 டாலர்கள் கிடைக்கும். அதாவது 1100 டாலர் போடும் போது 800 டாலர் கிடைக்கும்.

இது குறைந்தபட்ச லாபம் தான். அதிகளவில் எண்கள் ஒத்துப்போனால் அவருக்கு மேலும் மேலும் லாபம் அதிகரிக்கவே செய்யும். இதன் மூலம் யாருமே கணிக்க முடியாத லாட்டரியிலேயே அவருக்குக் குறைந்தது 800 டாலர் லாபம் கிடைப்பதை அவர் கண்டுபிடித்தார். 800 டாலர் என்பது குறைந்த தொகை இல்லை. அது இந்திய மதிப்பில் ரூ. 6600 ஆகும். இது குறித்து அவர் கூறுகையில், "நான் அந்த லாட்டரி விளம்பரத்தைப் பார்த்த உடன், இரண்டே நிமிடத்தில் இந்த ஓட்டை இருப்பது தெரிந்துவிட்டது. இதை வைத்து நிலையாக நல்ல லாபம் பார்க்கலாம் என்பது புரிந்துவிட்டது" என்றார். அந்தத் தம்பதி முதலில் சோதனை அடிப்படையில் 3600 டாலருக்கு லாட்டரி வாங்கியுள்ளனர். அதில் அவர்களுக்கு 6300 டாலர் (சுமார் ரூ 5.2 லட்சம்) கிடைத்துள்ளது. 

அடுத்த 8000 டாலருக்கு அவர்கள் லாட்டரியை வாங்கிய நிலையில், அதில் அவர்களுக்கு இரட்டிப்பு லாபம்.. அதாவது இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் லாபமாகக் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துள்ளனர். இவர்கள் வெல்லும் ஜாக்பாட் தொகையாக இல்லை என்பதால் லாட்டரி நிறுவனமும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த தம்பதி வெற்றி மீது வெற்றியைக் குவித்துள்ளனர். சில ஆண்டுகள் கழித்து இதே நிறுவனம் மாசசூசெட்ஸ் என்ற இடத்தில் இதுபோன்ற லாட்டரியை நடத்துவது குறித்த தகவல் இவருக்குக் கிடைத்துள்ளது. அதிலும் இதே விதி இருந்ததால் கட்டாயம் வெல்லலாம் என்பதைக் கண்டறிந்த அந்த நபர் 1100 கிமீ பயணித்து அந்த லாட்டரியை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

கடந்த 9 ஆண்டுகளாக இப்படியே அந்த தம்பதி மொத்தம் 26 மில்லியன் டாலர், அதாவது 216 கோடி ரூபாயை வென்றுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு $8 மில்லியன் டாலர் அதாவது 66 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதை வைத்து அவர்கள் புதிதாக வீட்டைக் கட்டி 14 பேரக்குழந்தைகள் மற்றும் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கும் உதவியுள்ளனர். 9 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தத் தம்பதி தொடர்ந்து வெல்வது இன்ஸ்பெக்டர் ஜெனரலின் விசாரணைக்கு வழிவகுத்தது. விசாரணையில் அவர்கள் விதிகளை முறையாகப் பின்பற்றியுள்ளது உறுதியானது. இதனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அந்த ரூ. 200 கோடி தொகையுடன் ஜாலியாக ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறார்கள் அந்த தம்பதி.

Tags:    

Similar News