கொரோனா அச்சம் காரணமாக பயண சிவப்பு நாடுகளின் பட்டியலில் விரைவில் பிரான்சும் சேர்க்கப்படலாம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், புதிய மாறுபாடுகளைத், அதாவது பரவுவதலை தடுப்பதும் அவசியம்.கொரோனா ஊரடங்கு விதிகளின் கீழ் வெளிநாட்டு பயணம் இன்னும் இங்கிலாந்து தடைசெய்யப்பட்டுள்ளது. வரும் திங்கட் கிழமை முதல் இங்கிலாந்து பயணக்கட்டுபாடுகளில் புதிய விதிமுறைகள் வரவுள்ளது.அதை மீறுவோருக்கு 5000 பவுண்ட அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக பிரான்சில் கொரோனாவின் மூன்றாவது அலை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.இந்த நிலையில் இங்கிலாந்து கொரோனாவின் மூன்றாவது அலை நம்மை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலை சிவப்பு நாடுகளின் (கொரோனா அதிகம் பரவும் நாடுகள்) பட்டியல் எனவும், இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் தடை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.