பயணியின் தலைமுடியில் பேன்: அவசரமாக தரையிறங்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்
தரையிறங்கியதும், 12 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டு, பயணிகளுக்கு ஹோட்டல் வவுச்சர்கள் வழங்கப்பட்டன.;
லாஸ் ஏஞ்சல்ஸ்-நியூயார்க் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒரு பெண்ணின் தலைமுடியில் நடுவானில் பேன் ஊர்ந்து செல்வதைக் பயணிகள் கண்டதால் பீனிக்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த ஈதன் ஜூடெல்சன், தனது அனுபவத்தை டிக்டாக்கில் பகிர்ந்து, பயணிகளிடையே ஏற்பட்ட குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை விவரித்தார். மாற்றுப்பாதை குறித்து பணியாளர்கள் மிகக்குறைந்த தகவலை அளித்ததால், பயணிகள் குழப்பமடைந்தனர். இந்த சம்பவம் ஜூன் மாதம் நடந்தது.
ஜூடெல்சன் என்ற பயணி அவரது வீடியோவில், அந்தக் காட்சியை விவரித்தார்: "நான் சுற்றிப் பார்க்கிறேன், யாரும் தரையில் இல்லை, யாரும் பயப்படவில்லை. அது அவ்வளவு மோசமானது இல்லை என நான் நினைக்கிறேன். ஆனால் நாங்கள் தரையிறங்குகிறோம், நாங்கள் தரையிறங்கியவுடன், எனக்கு பக்கத்தில் இருந்த பெண் சடாரென்று எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு விரைந்தாள். தரையிறங்கியதும், பயணிகளுக்கு 12 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டு, ஹோட்டல் வவுச்சர்கள் வழங்கப்பட்டன. "நாங்கள் ஃபீனிக்ஸில் இறங்கும்போதே, 'ஹோட்டலுக்கான உங்கள் வவுச்சர் இதோ' என்று மின்னஞ்சல் வந்தது. என்று கூறினார்
விமானம் அவசரமாக தரையிறங்கிய பிறகு, ஜூடெல்சன் சக பயணிகளிடையே அமைதியான உரையாடலில் நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, இரண்டு பயணிகள் ஒரு பெண்ணின் தலைமுடியிலிருந்து பேன் ஊர்ந்து செல்வதைக் கண்டனர், இதனால் அவர்கள் விமானப் பணிப்பெண்களை எச்சரிக்கத் தூண்டினர். அந்த இரண்டு சிறுமிகளும், அந்த பெண்ணின் தலைமுடியில் இருந்து பேன்கள் ஊர்ந்து செல்வதை அவர்கள் பார்த்தார்கள். மற்றும் விமான பணிப்பெண்ணை எச்சரித்தார்கள்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பின்னர் மருத்துவ அவசரநிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது,
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் பீப்பிள் க்கு வெளியிட்ட அறிக்கையில் , "ஜூன் 15 அன்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 2201, லாஸ் ஏஞ்சல்ஸ் (LAX) இலிருந்து நியூயார்க் (JFK) க்கு சேவையுடன் கூடிய மருத்துவ தேவைகள் காரணமாக பீனிக்ஸ் (PHX) க்கு திருப்பி விடப்பட்டது." என்று தெரிவித்தார்
அதிர்ஷ்டவசமாக, பயணிகள் இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றனர்.