அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, எங்கள் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.