அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ( ஜோ பைடன்) டெலாவேருக்குத் திரும்புவார், அங்கு அவர் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார். அந்த நேரத்தில் தனது அனைத்து கடமைகளையும் முழுமையாகச் செய்வார்" என்று தெரிவித்துள்ளது.
அவர் மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் "பொது உடல்நலக்குறைவு" ஆகியவற்றால் அவதிப்படுவதாக வெள்ளை மாளிகை கூறியது, கோவிட் மருந்துகளை உட்கொண்டார், மேலும் டெலாவேரின் ரெஹோபோத்தில் உள்ள அவரது கடற்கரை வீட்டில் நேராக தனிமைப்படுத்தப்பட்டார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோபைடன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று மதியம் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது, நான் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன், அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நான் குணமடைவதற்காக தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளேன். அந்த நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
செவ்வாயன்று நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில் எனக்கு ஏதேனும் மருத்துவ நிலை தோன்றியிருந்தால் ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதில் இருந்து ஒதுங்கிவிடலாம் என கூறிய சில மணி நேரத்தில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யபப்ட்டுள்ளது