ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்-ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்கள் பங்கேற்க தடை

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, வரும் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

Update: 2021-07-10 01:51 GMT

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக போட்டியை ரசிக்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு அந்நாடு தடை விதித்திருந்தது. உள்நாட்டு ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜப்பானில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, வரும் 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார். இதனால், அவசர நிலை கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும். இதனையடுத்து, இந்த ஒலிம்பிக் திருவிழா பார்வையாளர்கள் இன்றி வித்தியாசமான முறையில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News