இத்தாலியில் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வோர் கைது

Update: 2021-04-04 07:00 GMT

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி உள்ளது. இங்கு முகக்கவசம் இன்றி வெளியில் செல்வோர் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டும் உள்ளது.

இத்தாலியில் முகமூடி அணியாமல் மெட்ரோவில் பயணித்த இரண்டு இலங்கையர்களை கைது செய்ய அந்நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தனர்.எனினும் குறித்த இலங்கையர்கள் கூர்மையான ஆயுதங்களால் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.

இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூர்மையான ஆயுதத்தால் அச்சுறுத்தியது, தாக்குதல் நடத்தியமை மற்றும் எடுத்துச் சென்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags:    

Similar News