Israel Hamas War Today News: தெற்கு இஸ்ரேல் நகரம் மீது ராக்கெட்டுகளை ஏவிய ஹமாஸ்

சனிக்கிழமை காலை ஹமாஸ் ராக்கெட் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து இஸ்ரேலின் ஸ்டெரோட் நகரம் சிவப்பு எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டது

Update: 2023-10-14 08:52 GMT

வடக்கு காசாவில் இருந்து மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேறும்படி இஸ்ரேல் நேற்று கெடு விதித்தது. இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராவதாக தகவல் வெளியானது. இஸ்ரேலின் எச்சரிக்கையையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

காசாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து பாலஸ்தீனிய குடிமக்கள் வெளியேறுவதைத் தடுக்க ஹாமாஸ் முயற்சித்து, அவர்களை "மனிதக் கேடயங்களாக" மாற்ற முயற்சிப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.

காசாவின் தெற்குப் பகுதிகளுக்குச் செல்லுமாறு 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் - காசா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பொதுமக்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது .

சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, செய்திகள், சோதனைச் சாவடிகள் மற்றும் தரையில் நிறுத்தங்களைப் பயன்படுத்தி ஹமாஸ் "பாலஸ்தீனிய குடிமக்களை வெளியேற்றுவதைத் தடுக்க" முயன்றது "கவலைக்குரியது" என்று கான்ரிகஸ் கூறினார்.

வெளியேற்றம் இஸ்ரேல் தரைவழி ஊடுருவலுக்கான வழியை தெளிவுபடுத்துகிறது.

வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை தடுக்க ஹமாஸ் முயற்சிப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. எங்கள் நோக்கங்களை முன்கூட்டியே தெரிவித்துவிட்டோம், ஏனென்றால் போரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. பொதுமக்கள் எங்கள் எதிரியல்ல. பொதுமக்களை கொல்லவோ, காயப்படுத்தவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நாங்கள் ஹமாஸ் மைப்பிற்கு எதிராக சண்டையிடுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாசால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 150க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலரின் உடல் காசா முனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய சோதனையில் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனையில் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற "பல பயங்கரவாதிகளை" இஸ்ரேலிய ஆளில்லா விமானம் குறிவைத்து கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) சனிக்கிழமை தெரிவித்தன.

தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டெரோட் நகரம் சனிக்கிழமை காலை நகரத்தின் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை வீசியதை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் "ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான ஸ்டெரோட் மீது ராக்கெட்டுகளை" வீசியது.

ராக்கெட்டுகளை இடைமறிக்க இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பட தொடங்கியது.  நகரம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது .

Tags:    

Similar News