ஜன்னல் சீட்டுக்கு சண்டை: பேருந்தில் மட்டுமல்ல, விமானத்திலும்

ரயன்ஏர் விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகளில் ஒருவர் தனது ஜன்னலோர இருக்கைக்கு செல்ல மற்றவர் வழிவிடாததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2023-07-10 06:14 GMT

நம்ம ஊரில் பொதுவாக பேருந்தில் தான் ஜன்னல் ஓர இருக்கைக்கு அடிதடி நடக்கும். ஆனால், விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்கு செல்ல வழி விடாததால் பயணிகளுக்கிடைய சண்டை மூண்டது. மால்டாவில் இருந்து லண்டன் செல்லும்

ரயன்ஏர் விமானத்தில் இருந்த இரண்டு ஆண் பயணிகளுக்கு இடையே விமானத்தில் இருக்கை தொடர்பாக சண்டை ஏற்பட்டது. பயணிகளில் ஒருவர் தனது ஜன்னல் இருக்கைக்கு செல்ல மற்றவரை கடந்து செல்ல அனுமதிக்காததால் சண்டை தொடங்கியது.

ஜூலை 3 ஆம் தேதி மால்டாவிலிருந்து லண்டன் ஸ்டான்ஸ்டெட் செல்லும் விமானத்தில் பயணி ஒருவர் படம்பிடித்த காணொளியில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர் ஆகிய இருவர் தனது ஜன்னல் இருக்கைக்கு செல்ல வழி கொடுக்காததால் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காட்டியது. இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது

மோதல் வெடித்ததால், மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து பிரிக்க முயன்றனர். இந்த தகராறால் மற்ற பயணிகளுக்கு பீதி ஏற்பட்டது.

வீடியோவை படம்பிடித்த பயணி கூறுகையில், இந்த சம்பவத்தால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமானது மற்றும் அனைவரும் "எரிச்சலாக" இருந்தனர். வீடியோவில், ரியான்ஏர் குழு உறுப்பினர் இருவரையும் பிரிக்க கேபினில் நடந்து செல்வதைக் கண்டார்.

"அமெரிக்க பயணிக்கு ஜன்னல் ஓர இருக்கை, பிரிட்டனை சேர்ந்த மற்றொரு பயணிக்கு நடுவில் உள்ள இருக்கை. பிரிட்டிஷ் மனிதர் அமெரிக்க நபரை தனது ஜன்னல் இருக்கைக்கு செல்ல அனுமதிக்கவில்லை, பின்னர் ஒரு கைகலப்பு வெடிப்பதற்கு முன்பு சில வார்த்தைகள் பரிமாறப்பட்டன. விமானம் இரண்டு மணி நேரம் தாமதமானது. அனைவரும் எரிச்சலடைந்தனர்," என்று கூறினார்.

Tags:    

Similar News