தமிழ்த்துறையை மீட்டுருவாக்க லட்ச ரூபாய் நன்கொடை வழங்கிய பிரபல நடிகை
லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறையை மீட்டு உருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
முன்னதாக ஐக்கிய இங்கிலாந்து தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று 23 ஏப்ரல் 2022 நடிகை ராதிகா சரத்குமார் இங்கிலாந்து தமிழ்துறை குழுவினருடன் லண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, நன்கொடைக்கான காசோலையை தமிழ்த்துறை குழுவினருக்கு வழங்கினார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது. நன்கொடை செய்ய விருப்பம் உள்ளவர் www.tamilstudiesuk.org என்ற தளத்தில் சென்று வழங்கலாம் என லண்டன் பல்கலைக்கழகதெரிவிக்கப்பட்டுள்ளது.