துருக்கியில் நிலநடுக்கம்: வடக்கு சிரியாவில் கட்டடங்கள் தரைமட்டமானது
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கியை உலுக்கியது. கட்டடங்கள் தரைமட்டமானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் காசியான்டெப்பில் இருந்து 33 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் நூர்டாகி நகரத்திலிருந்து 26 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 18 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒஸ்மானியே மாகாணத்தில் ஐந்து பேரும், சிரியாவுடனான துருக்கியின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சான்லியுர்ஃபாவில் மேலும் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் தலைநகர் அங்காரா மற்றும் துருக்கியின் பிற நகரங்களிலும், பரந்த பகுதியிலும் உணரப்பட்டது.
பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்தது 17 பேர் இறந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர் - ஆனால் இறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
துருக்கி உலகின் மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாகும். 1999 ஆம் ஆண்டில், நாட்டின் வடமேற்கில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.