எலன் மஸ்கின் மகன் கேள்விக்கு டெல்லி காவல்துறை ‘பர்ர்ஃபெக்ட்’ பதில்
Elon Musk's son asks if there are any police cats- எலன் மஸ்க்கின் மகன் போலீஸ் பூனைகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, டெல்லி காவல்துறை ‘பர்ர்ஃபெக்ட்’ பதிலை தெரிவித்துள்ளது வைரலாகியுள்ளது.;
Elon Musk's son asks if there are any police cats- எலோன் மஸ்க் தனது மகனின் போலீஸ் பூனை கேள்வி குறித்த டிவிட்டர் பதிவுக்கு டெல்லி போலீஸார் கவனித்து, பதிலைப் பகிர்ந்ததனர்.
டெல்லி காவல்துறையின் புத்திசாலித்தனமான சமூக ஊடக பதிவுகள் மற்றும் தொடர்புகள் நெட்டிசன்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. மேலும் ஏராளமானோரின் கவனத்தையும் டெல்லி காவல் துறையினர் ஈர்த்துள்ளனர். தொழில்நுட்ப நிறுவனமான எலோன் மஸ்க்கின் ட்வீட்டர் பதிவுக்கு டெல்லி காவல் துறை வேடிக்கையான பதிலைக் கொடுத்தது வைரலாகியுள்ளது.
Delhi Police has 'purrfect' response
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள எலோன் மஸ்க், தனது 3 வயது மகன் லில் எக்ஸ், போலீஸ் நாய்களைப் பார்த்து போலீஸ் பூனைகள் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டதைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில் "போலீஸ் நாய்கள் இருப்பதால், போலீஸ் பூனைகள் உள்ளனவா என்று லில் எக்ஸ் கேட்டார்." என பதிவிட்டுள்ளார்.
elon musk, delhi police, lil x, twitter, funny, delhi police reacts
இந்தப் பகிர்வைக் கவனித்த டெல்லி காவல் துறை, நகைச்சுவையாக "வணக்கம் @elonmusk, லில் எக்ஸிடம் போலீஸ் பூனைகள் இல்லை என்று சொல்லுங்கள், ஏனெனில் அவை பூனை-ஒய் மற்றும் 'புர்'பெட்ரேஷன் ஆகியவற்றிற்காக பதிவு செய்யப்படலாம்." என பதில் பதிவில் தெரிவித்துள்ளனர்.
After Elon Musk shared a tweet about his son's question on cat cops
இந்த பதிவு ஒரு மணி நேரத்தில் 1000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் ஏராளமானோருக்கு பகிரப்பட்டும், கமெண்டுக்களை குவித்து வருகிறது.
Delhi Police was quick to notice it and shared a response, trending news today in tamil, today news in tamil
உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான பெர்னார்ட் அர்னால்ட்டின் LVMH நிறுவன பங்குகள் 2.6 சதவீதம் சரிந்ததை அடுத்து எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். எலான் மஸ்க், அர்னால்ட் ஆகியோர் உலகின் 500 பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.