நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி...

பிரதமா் கே.பி. சா்மா ஓலி

Update: 2021-05-10 14:00 GMT

நேபாளத்தில் பெரும்பான்மை இழந்துள்ள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் தோல்வியடைந்தது.

பிரதமர் கே.பி.சர்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎன்) அதிகாரப்பூா்வமாகத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தை பிரதமா் ஓலி கொண்டுவந்த நிலையில் தோல்வியடைந்தார்.

நேபாள நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 93 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.பிரதமருக்கு எதிராக 124 எம்.பி.க்கள் வாக்களித்ததால் கே.பி.ஷர்மா ஒலி தோல்வியடைந்தார். 

Tags:    

Similar News