கனடாவில் கோவிட்-19 தொற்றின் தற்போதைய நிலவரம்

Update: 2021-04-02 05:15 GMT

கனடா அரசு வெளியிட்ட  விபரப்படி ஏப்ரல் 1,2021 மாலை 7 மணி,மேலும் 5,808 தொற்றுகள் பதிவாகி உள்ளது, இவற்றையும் சேர்த்து மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 987,918ஆக உயர்ந்துள்ளது.தொற்றிலிருத்தி இதுவரை 915,348 பேர் மீண்டுள்ளார்கள்.

இறப்புகளைப் பொறுத்தவரை 23,002 பேர் இதுவரை இறந்துள்ளார்கள், இவர்களில் 43 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள் அல்லது புதிதாக இறந்தவர்கள் என்று அரசு அறிக்கை தெரிவிக்கின்றது. கனடாவில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 2.377 விகிதம் பேர் பலியாகி உள்ளார்கள். கனடாவில் புதிதாக 128,324 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது, இதுவரை மொத்தம் 27,770,015 கோவிட் சோதனைகளைச் செய்துள்ளது.

கனடாவில் நேற்று சனிக்கிழமை வரை 5,896,845 கொரோனா தடுப்பு மருந்துகளைப் ஏற்றப்படுள்ளது, மொத்த சனத்தொகையில் 13.683% விகிதம் பேர் குறைந்தது முதலாவது தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளனர். அவர்களில் 5,200,717 ஒரு தடுப்பு மருந்தை மட்டும் பெற்றுள்ளனர் மேலும் 696,128 பேர் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர்.

 மொத்த இறப்புகள் நேற்றைய நேற்றைய விபரப்படி ஒன்ராறியோவில் 7,389ஆகவும் கியூபெக்கில் 10,676 ஆகவும் உள்ளது. கடந்த 14 நாட்களில் ஒன்ராறியோவில் 187 இறப்புக்களும் கியூபெக்கில் 100 இறப்புக்களும் பதிவாகியது.

Tags:    

Similar News