கடந்த 24 மணி நேரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள கிரிப்டோகரன்சி

உலகின் முக்கியமானவற்றில் ஒன்றான கிரிப்டோகரன்சி கடந்த 24 மணி நேரத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது;

Update: 2022-04-23 12:18 GMT

உலகின் முக்கிய கிரிப்டோகரன்சி கடந்த 24 மணி நேரத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள கிரிப்டோகரன்சி

பிட்காயின், எத்திரியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகள் உலக நடைமுறைக்கு வந்து 11 ஆண்டுகள்தான் ஆகின்றன. குறைந்த காலக்கட்டத்தில் இந்த கிரிப்டோகரன்சி துறை அபரித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், பெரும் சறுக்கல்களையும் சந்தித்துள்ளது.

இந்த நிலையற்றத் தன்மையால்தான் கிரிப்டோகரன்சிகளை பலரும் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதில்லை. ஆனால், சிலர் கிரிப்டோகரன்சி மூலம் பரிமாற்றம் செய்வதை சட்டபூர்வமாகவும் மாற்றியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜப்பான் நாடு, பிட்காயினை சட்டப்பூர்வ பணமாக அங்கீகரித்தது. பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகளையும் அங்கீகரித்தது.கிரிப்டோகரன்சி மூலம் வர்த்தக் செய்யக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த 2018 ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது.

உலகின் முக்கிய கிரிப்டோகரன்சி கடந்த 24 மணி நேரத்தில் 1.82% குறைந்து 1.84 ட்ரில்லியன் டாலராக குறைந்துள்ளது. பிட்காயின்​ ரூ.31.69 லட்சமாகத் தொடங்கி 2.21% ஆக குறைந்துள்ளது. எதெர் ரூ.2.45 லட்சமாகத் தொடங்கி 1.51% ஆக குறைந்துள்ளது. டோஜ்காயின்​ ரூ.10.82 ஆகத் தொடங்கி 1.27% ஆக குறைந்துள்ளது. பினான்ஸ் நாணயம் ரூ.32,390 ஆகத் தொடங்கி 1.08% ஆக குறைந்துள்ளது.

Similar News