அமெரிக்காவை உற்றுநோக்கும் நாடுகள்

Update: 2021-04-04 05:30 GMT

அமெரிக்காவில் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5.50,000 ஐ தண்டியுள்ள வேளையில் வெள்ளிக்கிழமை தரவுகளுக்கு இணங்க அமெரிக்காவில் இதுவரை குறைந்தது ஒரு தடுப்பு மருந்து 101 மில்லியன் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது மொத்த  சனத்தொகையில் வயது வந்தவர்களின் 31 விகிதம் ஆகும். இதே வேளை கனடாவில் ஐந்து மில்லியன் கோவிட் தடுப்பு மருந்துகளை கொடுத்துள்ளது.

திருமணம் ஆனவர்கள் தமது தேனிலவுக்கு செல்லலாம் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா பல மில்லியன் தடுப்பு மருந்துகளை தமது தடுப்பு மருந்து வழங்கும் நிலையங்களுக்கு வழங்கி இருந்தது, இருப்பினும் கனடா மேலும் 72,000 தடுப்பு மருந்துகளை மட்டுமே வழங்கக்கூடியதாக இருந்தது.

மிசிசிப்பி, அலாஸ்கா, அரிசோனா மற்றும் ஜார்ஜியா போன்ற மாநிலங்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்து போடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நிலையம் வெளியிட்ட ஆலோசைப்படி தடுப்பு மருந்தை பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கும், அமெரிக்காவுக்குள்ளும் குறைந்த பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News