ரஷியாவில் தொடர்ந்து 3-ஆவது நாளாக கொரோனா அதிகரிப்பு : பலி எண்ணிக்கை கூடியது

ரஷியாவில் தொடர்ந்து 3-ஆவது நாளாக தினசரி கொரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.;

Update: 2021-10-09 05:22 GMT

கோப்பு படம் 

ரஷியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பலி எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 936 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கொரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன், 2,14,485 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுதவிர, மேலும் 27,246 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,717,356-ஆக உயர்ந்துள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News