தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியது!

கொரோனா 2வதுஅலை உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.;

Update: 2021-06-12 06:48 GMT

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரி8க்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.

இதன் தாக்கமாக கடந்த 24 மணி நேரத்தில் 9,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போதைய நிலைமை கவலையளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News