நிதி நிறுவனத்தை கையாளும் 15 வயது சிறுவன்: எங்கே என பார்க்கலாம் வாங்க
நிதி நிறுவனங்களை கையாளுவது தொடர்பான அவைட்டோ (Aviato) என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருப்பவர் எரிக் ஜு.;
எரிக் ஜூ.
குழந்தைகள் தங்கள் பள்ளி பாடங்களை படிப்பதில் மும்முரமாக இருக்கும் நேரத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தனது பள்ளி பாத்ரூமில் அமர்ந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அது தொடர்பான செய்தியை காணலாம் வாங்க.
நிதி நிறுவனங்களை கையாளுவது தொடர்பான அவைட்டோ (Aviato) என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருப்பவர் எரிக் ஜு. இவர் பள்ளியில் தனது வகுப்புகள் மற்றும் வணிக ஒப்பந்தங்களை ஒரே நேரத்தில் திறமையாக நிர்வகிக்கிறார். உதாரணமாக பள்ளிக்கு செல்லும் எரிக் ஜு, பிரேக் நேரங்களில் பாத்ரூமிற்கு சென்று முதலீட்டாளர்களுடனானசந்திப்பை ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்வார் .
இவர் நிறுவனம் ஆரம்பித்த இரண்டு வாரங்களில் $100k நிதியை சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எரிக் ஜூ டுவிட்டரிழும் மிகவும் பிரபலம். இவரது நகைச்சுவையான ட்வீட்களுக்கும் பிரபலமானது. அவருக்கு ட்விட்டரில் 50.7 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
இவ்வளவு இளம் வயதில் அவர் பெற்ற வெற்றியைத் தவிர, அவர் தனது பள்ளிகளையும் பணிகளையும் ஒரே நேரத்தில் கையாளும் விதம் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறார். எரிக் ஜூ வின் தாய் ஒரு மருத்துவர், தந்தை விஞ்ஞானி. எரிக் ஜூ பிரமாதமாக பிஸ்னஸ் செய்து வந்தாலும் அவருடைய பெற்றோருக்கு அவர் மருத்துவராக வேண்டும் என்பதே விருப்பம்.