ஓய்வு பெறும் வயதை உயர்த்த சீனா முடிவு
வயதானவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே செல்வதால் , ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவின் வயதான மக்கள்தொகையை சமாளிக்க சீனா தனது ஓய்வூதிய வயதை படிப்படியாகவும் கட்டங்களாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது என்று சீனாவின் மனித வள அமைச்சகத்தின் மூத்த நிபுணரை மேற்கோள்காட்டி குளோபல் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 280 மில்லியனிலிருந்து 2035 ஆம் ஆண்டளவில் 400 மில்லியனுக்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கிறது. ஆயுட்காலம் 1960 இல் சுமார் 44 ஆண்டுகளில் இருந்து 2021 இல் 78 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது, இது அமெரிக்காவை விட அதிகமாகும், மேலும் 2050 இல் 80 வயதை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவில் தற்போது வரையில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற விதி தான் நிலவுகிறது. அதனால் மக்கள் தொகை விகிதம் குறைந்தாலும், வயதானவர்களின் எண்ணிகை அதிகரித்து சாதாரண ஓய்வூதிய செலவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது
இதனால், வயதானவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் செலவீனங்கள் அதிகரித்துள்ளது என கூறபடுகிறது. ஆதலால், ஓய்வு பெரும் வயதை உயர்த்துவதற்கான திட்டத்தை சீனா கவனித்து வருவதாக சீன தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அறிவியல் அகாடமியின் தலைவர் ஜின் வெய்காங் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அப்படி அறிவிப்பதாக இருந்தால், ஆண்களின் ஓய்வு பெரும் வயது 60 என்றும், அலுவலக பணியாளர் பெண்களுக்கு 55 என்றும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 50 வயது எனவும் ஓய்வு பெரும் வயது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், மக்கள் தங்கள் சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.