பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதலால் இந்தியாவிற்கு லாபம் என சீனா அதிர்ச்சி

பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது இந்தியாவிற்கு லாபம் அளித்து விடும் என சீனா அதிர்ச்சியில் உள்ளது.

Update: 2024-01-18 15:12 GMT

பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்திய காட்சி.

பாகிஸ்தான் மீது  ஈரான் தாக்குதல் நடத்தியது சீனாவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது இந்தியாவிற்கு சாதகமாக முடியும் வாய்ப்புகள் உள்ளன.

பாகிஸ்தான் மீது வைக்கப்படும் அழுத்தங்கள் எல்லாம் சீனாவிற்கு ஒருவகையில் அழுத்தமாகவும், இந்தியாவிற்கு ஆதரவாகவும் மாறும். அந்த வகையில். பாகிஸ்தான் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியது சீனாவை நிலைகுலைய வைத்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு சீனா புதன்கிழமை அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியுள்ளது. அதற்கு முன்பாக இந்த சண்டையை முதலில் நிறுத்துங்கள். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா மறைமுகமாக பலனடையுமோ என்று எண்ணப்படும் நிலையில்தான் சீனா இந்த கருத்தை வெளியிட்டு உள்ளது. 

பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின் உயரடுக்கு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு முன்பு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இப்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. "இரண்டு தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறிய பாகிஸ்தான், இந்தச் சம்பவம் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்றும், "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் எச்சரித்து உள்ளது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது, கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க போகிறது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் - ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. முக்கியமாக ஈரான் ஆதரவு ஹவுதி படைகள் தீவிரமாக அமெரிக்காவை எதிர்த்து வருகின்றன.

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சகம்  பதிலளித்துள்ளது. அதில்., இந்தியா தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது. அதை ஆதரிக்காது. மேலும் தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை, தாக்குதல்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது இரண்டு நாட்டு பிரச்சனை என்றாலும் ஈரான் தற்காப்பிற்காக இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். இந்தியாவைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற சமரசமற்ற நிலைப்பாட்டை நாம் கொண்டுள்ளோம். அந்த வகையில் இந்த தாக்குதலை ஈரான் முழுக்க முழுக்க தற்காப்பிற்கு மேற்கொண்டு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் என கூறப்பட்டு உள்ளது.

இந்த விளக்கம் மூலம் ஈரானுக்கு  மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டை இந்தியாக எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News