ஜப்பானின் ஷொய் கிஷன் காய்சா நிறுவனத்துக்கு சொந்தமானதும் தைவானின் எவர் கிரீன் மரைன் நிறுவனத்தின் கீழ் குத்தகைக்கு இயக்கப்படும் 400 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு போக்குவரத்துக்கான கொள்கலன் கப்பல் எவர் கிவன் பயணித்த போது எதிர்பாராத பலத்த புழுதி காற்றால் கப்பல் நிலை தடுமாறி கால்வாயின் பக்கவாட்டில் மோதியதன் காரணமாக கால்வாயை முழுமையாக அடைத்துள்ளது.
சுயஸ் கால்வாயில் சரக்கு போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலை விடுவிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இது இது மனிதர்களின் தவறாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்றும். இயற்கையின் தாக்கம் இதில் இல்லவே இல்லை என்றும் சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை அதிகாரி ஒசாமா ரபி தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் தவறாக கூட இருக்கலாம். இந்த கப்பல் தரை தட்டி நிற்க காரணம் என கருதுகிறேன். அதிகாரிகள் இதற்கு முன்னதாக சொன்னது போல வானிலை ஒரு காரணம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
கப்பலை மீட்பதற்கான முயற்சியில் திறமையான நெதர்லாந்து நாட்டின் போகாலிஸ் நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். கால்வாய் மார்க்கத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பல கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கும் அபாயமும், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.