கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்கள், குளிர்சாதன டிரக்குகளில்..
நியூயார்க்கில் போன வருடம்;
நியூயார்க்கில் போன வருடம் கொரோனாவால் காரணமாக மரணமடைந்தவர்களின் உடல்கள், குளிர்சாதன டிரக்குகளில் தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து நியூயார் சிட்டி போலீசார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ,கடந்த ஆண்டு , கொரோனாவால் பலியான 750 பேரின் உடல்கள் இன்னமும் குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் விரைவில் இந்த எண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி வருகிறோம்.
இறந்தவர்களின் உடல்கள் ஹார்ட் தீவுப் பகுதியில் புதைக்கப்பட குடும்பத்தினர் விரும்பினால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்' என தெரிவித்துள்ளார்
('கொரோனா நோயாளிகளின் உடல்களை இவ்வாறு வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. உடனடியாக அந்த உடல்களை புதைக்கவோ எரிக்கவோ வேண்டும்' என, மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது)