பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-11 05:24 GMT

பில் கேட்ஸ் 

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இது குறித்து பில்கேட்ஸ், நான் இரண்டு தவணை தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸும் போட்டுக்கொண்டேன். எனக்கு கொரோனா வந்திருக்கும் இந்த சமயத்தில் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ வசதி இருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தனது உடல்நிலை பழையபடி திரும்பும் வரை பில் கேட்ஸ் தனிமையில் இருப்பார் 

Tags:    

Similar News