அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் விலகல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு தனது "முழு ஆதரவையும் ஒப்புதலையும்" வழங்கினார்.;
அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் (81) விலகியுள்ளார் .
தனக்குப் பதிலாக அதிபா் வேட்பாளா் ஆவதற்கு துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார் .
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஞாயிற்றுக்கிழமை போட்டியிலிருந்து விலகிய பின்னர், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை நிறுத்த ஒப்புதல் அளித்தார் ,
நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபா் ஜோ பைடன் களத்தில் இருந்தார் . குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார் .
இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக பைடனின் செயல்திறனில் சுணக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியது விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவரின் சொந்தக் கட்சியினரே மிகுந்த அழுத்தம் அளித்து வந்தனா்.
அதிபா் தோ்தலில் போட்டியிட அவருக்கு எதிர்ப்பு வலுத்த சூழலில், அவா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் .
இந்த நிலையில், அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதிபராக அமெரிக்கா்களுக்கு சேவையாற்றுவதே எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம். அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். அதிபராக எஞ்சிய பதவி காலத்தில் எனது கடமைகள் மீது மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். எனது முடிவு தொடா்பாக நாட்டு மக்கள் இடையே விரைவில் விரிவாக உரையாற்றுவேன்’ என்று தெரிவித்துள்ளார்
பைடன் வெளியிட்ட மற்றொரு பதிவில், கடந்த 2020-ஆம் ஆண்டு நான் அதிபா் தோ்தலில் போட்டியிட்டபோது கமலா ஹாரிஸை துணை அதிபராக தோ்வு செய்ய வேண்டும் என்பதே எனது முதல் முடிவாக இருந்தது.
இந்நிலையில், தற்போதைய அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களம் காண வேண்டும் என்பதற்கு எனது முழு ஆதரவு மற்றும் ஒப்புதலை வழங்குகிறேன் என்றார்