ஆஸ்திரேலியாவில் மோசமான நிலை

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் அணைகள் பெருக்கெடுத்து மாநிலத் தலைநகர் சிட்னி மற்றும் தென் கிழக்கு குவின்ஸ்லாந்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-03-23 11:45 GMT

 ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் அணைகள் பெருக்கெடுத்து மாநிலத் தலைநகர் சிட்னி மற்றும் தென் கிழக்கு குவின்ஸ்லாந்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் எங்கும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்  இந்த நிலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கார்களில் சிக்கிக்கொண்டவர் உட்பட குறைந்த 750 பேர் அவசர சேவை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் நிர்க்கதியான குடும்பம் ஒன்றை அவர்களின் வீட்டில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் காப்பற்றப்பட்டனர். உயிர்ழப்புகள் பதிவாகாதபோதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

Tags:    

Similar News