கொடுக்கிற தெய்வம் கூரையை மட்டுமல்ல, தரையை பிளந்தும் கொடுக்கும்
அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் வயல் ஒன்றில் திடீரென தோண்ட தோண்ட தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது;
ஒருவருக்கு எப்படி, எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாருக்குமே தெரியாது. தினசரி வேலையைச் செய்து கொண்டிருப்பவருக்குக் கூட திடீரென லக் அடித்தால் ஒரு நாளில் வாழ்க்கையே மாறிவிடும். இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொள்ளலாம்
அப்படியொரு சம்பவம் தான் ஒருவருக்கு நடந்துள்ளது. அவரது விவசாய நிலத்தைத் தோண்டத் தோண்ட உள்ளே இருந்து தங்க நாணயங்கள் வந்துள்ளது. இதைப் பார்த்து அவரே ஒரு நொடி ஷாக் ஆகிவிட்டராம்.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள சோள விவசாயி ஒருவர் ஏதோ காரணத்திற்காகத் தனது வயலை தோண்டியுள்ளார். அப்போது அங்கே தங்க நாணயங்கள் இருந்துள்ளன. தனது நிலத்தில் நூற்றுக்கணக்கான தங்க காசுகள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏதோ சில நாணயங்கள் இல்லை. தோண்டத் தோண்டத் தங்க நாணயங்கள் வந்து கொண்டே இருந்துள்ளது. தங்க நாணயங்கள்: இப்படி மொத்தம் 700 தங்க நாணயங்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத விவசாயி, தனது சொத்தில் மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தியபோது கண்டுபிடித்தார். முதலில் சில காசுகள் கிடைத்துவிட்டதாக எண்ணிய அவர், தொடர்ந்து தேடியபோது, நூற்றுக்கணக்கான நாணயங்கள் இருப்பதை உணர்ந்தார். நாணயங்கள் ஒரு ஆழமற்ற குழிக்குள் இருந்தன. அவை அனைத்தும் நல்ல நிலையில் இருந்தன.
விவசாயி அந்த நாணயங்களை உள்ளூர் நாணய வியாபாரியிடம் எடுத்துச் சென்றார், அவர் அவை உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தினார். இந்த நாணயங்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட ஒரு ராணுவ வீரரால் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று வியாபாரி கூறினார். சிப்பாய் நாணயங்களை திருடாமல் இருக்க அவற்றை புதைத்திருக்கலாம் அல்லது அவற்றை அவர் வெறுமனே மறந்துவிட்டிருக்கலாம்.
உள்நாட்டுப் போர் காலத்தைச் சேர்ந்த இந்த நாணயங்கள் 1 மில்லியன் டாலர் மதிப்புடையவை. அமெரிக்க சட்டப்படி அவரது நிலத்தில் கண்டுபிடிக்கப்படும் அனைத்து பொருட்களும் உரிமையாளருக்குச் சொந்தம் என்பதால், இப்போது அந்த தங்க நாணயங்களை விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
விவசாயி இப்போது நாணயங்களை விற்க திட்டமிட்டுள்ளார். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.
தங்க நாணயங்களின் கண்டுபிடிப்பு அமெரிக்க மேற்குலகின் வளமான வரலாற்றை நினைவூட்டுவதாகும். அமெரிக்க வரலாற்றில் உள்நாட்டுப் போர் ஒரு கொந்தளிப்பான காலமாக இருந்தது, மேலும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்களில் சிலர் தங்களுடைய விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக புதைத்திருக்கலாம்.
விவசாயியின் கண்டுபிடிப்பு ஒரு அதிர்ஷ்டம், ஆனால் இது உள்நாட்டுப் போரின் போது பலர் சந்தித்த இன்னல்களை நினைவூட்டுகிறது. நாணயங்கள் கடந்த காலத்திற்கான உறுதியான இணைப்பாகும், மேலும் அவை பெரும் எழுச்சி மற்றும் மாற்றத்தின் ஒரு பார்வையை வழங்குகின்றன.
அமெரிக்காவில் கடந்த 19ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. நாட்டில் அடிமை தொடர்வது குறித்த விவகாரத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மோதிக் கொண்டன. இதனால் கடந்த 1861 முதல் 1965ஆம் ஆண்டு வரை அமெரிக்கா முழுக்க உள்நாட்டுப் போர் தொடர்ந்தது. அந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பற்றி எரிந்தது என்ற சொல்லலாம். அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
1840 முதல் 1863 வரையிலான காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த 1, 10, 20 ஆகிய தங்க நாணயங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக 1863இல் பிலடெல்பியாவில் அச்சிடப்பட்ட 18 மிகவும் அரிதான $20 தங்க நாணயங்களும் இருந்துள்ளது. இது ரொம்பவே அரிதான தங்க நாணயமாகக் கருதப்படுகிறது. 1861-1865 வரை நடந்த உள்நாட்டுப் போரில் கென்டக்கி மாகாணம் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இதனால் அப்போது பல இடங்களில் இருந்தும் மக்கள் பாதுகாப்பு கருதி கென்டக்கி மாகாணத்திற்குச் சென்றனர். இதனால் கென்டக்கி மாகாணத்தில் இப்படிப் பல புதையல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்படி உள்நாட்டுப் போர் சமயத்தில் யாரோ சிலர் புதைத்து வைத்த தங்க நாணயங்களால் தான் இப்போது விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இதே விவசாயி இந்தியாவில் இவ்வளவு தங்க நாணயங்களை தனது நிலத்தில் கண்டெடுத்திருந்தால், இந்நேரம் அவை அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமாகியிருக்கும்