இத்தாலி விமான விபத்து: எட்டு பேர் பலி

இத்தாலி மிலன் நகரில் உள்ள காலி கட்டிடத்தில் சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது;

Update: 2021-10-04 05:47 GMT

இத்தாலியில் விமானம் மோதியதில் சேதமடைந்த கட்டடம்

ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறிய தனியார் விமானம் ஞாயிற்றுக்கிழமை மிலன் புறநகரில் உள்ள ஒரு காலியான, இரண்டு மாடி அலுவலக கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது, அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக இத்தாலிய செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.

லாப்ரெஸ் செய்தி நிறுவனம் ஆரம்பத்தில் சம்பவ இடத்திலிருந்த தீயணைப்பு வீரர்களை மேற்கோள் காட்டி விமானி மற்றும் அதில் இருந்த ஐந்து பயணிகளும் கொல்லப்பட்டனர். ஆனால் பின்னர் லாப்ரெஸ் மற்றும் பிற ஊடகங்கள் விமானத்தில் ஒரு சிறுவன் உட்பட எட்டு பேர் இருந்ததாக கூறினர்.

பயணிகள் அனைவரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாக ராய் மாநில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கையை தீயணைப்பு அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. 

மிலனுக்கு அருகிலுள்ள சிறிய நகரமான சான் டொனாடோ மிலனீஸில் உள்ள சுரங்கப்பாதை நிலையம் அருகே அதிகாலை நடந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்களைத் தவிர வேறு யாரும் பலியாகவில்லை என்று தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் பல கார்கள் எரிந்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் வாகனத்தில் யாரும் இல்லை என்றும் கூறினர். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து வெளியான அடர்ந்த புகை பல  கிலோமீட்டருக்கு தெரிந்தது. 

Tags:    

Similar News