அடுத்தடுத்து நிலநடுக்கம்: அச்சத்தில் ஆப்கான் மக்கள்
ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது;
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் அதே பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும், பாகிஸ்தானின் லாகூரிலும், ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது
ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன. 12) காலை 4.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
பூமிக்கடியில் சுமார் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் வெளிவரவில்லை.
கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களும் அதிர்ந்தன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது.
காஷ்மீரிலும், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் நிலஅதிர்வை உணர்ந்தனர். ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.