ருவாண்டா இனப்படுகொலை நினைவு நாள்

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மனித வரலாற்றில் ஒப்பீடு செய்ய முடியாத மிகக் கொடுமையான சம்பவம் நடந்து 28 ஆண்டுகள் ஆகிறது

Update: 2022-04-07 02:48 GMT

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மனித வரலாற்றில் ஒப்பீடு செய்ய முடியாத மிகக் கொடுமையான சம்பவம் நடந்து இந்த மாதத்தோடு 28 ஆண்டுகள் ஆகிறது.

1994-ம் ஆண்டில் இதே ஏப்ரல் 7ல் தொடங்கி ருவாண்டா மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 சதவீதம் பேர், அதாவது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஹுட்டு இனத்தை சேர்ந்த ருவாண்டா அதிபர் விமான விபத்தில் இறந்ததற்கு டுட்சி இனத்தவர்தான் காரணம் என்பதால் டுட்சி இனத்தவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து 3 மாதங்களாக நடந்த மனித வேட்டையை உலகமே அதிர்ச்சியோடு பார்த்தது. ஐ.நா. சபை இந்தப் படுகொலையைத் தடுக்க எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது.

அப்போது நடந்த சம்பவங்களை ருவாண்டா மக்கள் இப்போது நினைத்துப் பார்த்து, தங்கள் வாழ்க்கையில் இழந்ததை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள்.

ஆனாலும் இனப்படுகொலையில் உயிர் இழந்தவர்களுக்காகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க இந்த நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Tags:    

Similar News