அமெரிக்க இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட தினம் இன்று
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற உலக வர்த்தக மையக் கட்டட இரட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்ட தினம் இன்று
செப்டம்பர் 11, 2001 அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தினம் இன்று. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற உலக வர்த்தக மையக் கட்டட இரட்டை கோபுரத்தில் நான்கு விமான பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. நான்கு விமானத்தில் இருந்த 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
இதில் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்காக 19 தீவிரவாதிகளால், 4 வர்த்தக விமானங்கள் கடத்தப்பட்டன. 757ம் எண் கொண்ட போயிங் விமானத்தை இருவரும், 767ம் எண் கொண்ட மற்றொரு போயிங் விமானத்தை இருவரும் கடத்தினர். மேலும், லாஸ் ஏஞ்சல்சிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை மூவரும், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை ஒருவரும் கடத்தினர். பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்துவதற்காகவே, அதிக எரிபொருளை சேமிக்கும் திறன் கொண்ட நீண்ட விமானங்களை கடத்தினர்