கலிபோர்னியா: Hollywood அடையாளத்தை மாற்ற முயன்ற 6 பேர் கைது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Hollywood அடையாளத்தை மாற்ற முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-02-03 17:14 GMT

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஹாலிவுட் ஒன்றாகும். இந்நிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த லேண்ட் மார்க் இருக்கும் மலையின் மீது ஏறி Hollywood என்ற இடம் அருகே w எழுத்தை மறைத்து B வடிவில் நின்று "Hollyboob" என்று வரும் வகையில் நின்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.


போலீஸ் விசாரணையின்  போது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.

Similar News