சீனாவில் 4,வது COVID-19 தடுப்பூசிக்கு அனுமதி

Update: 2021-03-17 06:30 GMT

சீனாவின் சி.டி.சி.யின் தலைவரான காவ் ஃபூ, கடந்த வாரம் அவசரகால பயன்பாட்டிற்காக கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புரத சப்யூனிட் தடுப்பூசியை உருவாக்க வழிவகுத்ததாக சீன அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மைக்ரோபயாலஜி திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனா அவசரகால பயன்பாட்டிற்காக ஒரு புதிய COVID-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது,அந்த நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரால் குறித்த புதிய தடுப்பூசி உருவாக்கப்பட்டது,

அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்படுகின்ற நான்காவது தடுப்பூசி இதுவாகும்.

இந்த தடுப்பூசியை அன்ஹுய் ஜிஃபை லாங்க்காம் பயோஃபார்மாசூட்டிகல் கோ லிமிடெட் மற்றும் சீன அறிவியல் அகாடமி இணைந்து உருவாக்கியது. இந்த குழு கடந்த ஆண்டு அக்டோபரில் கட்டம் 1 மற்றும் கட்டம் 2 மருத்துவ பரிசோதனைகளை முடித்து, தற்போது உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் கடைசி கட்ட சோதனைகளை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் தரவுகளைப் பகிர முடியாது, ஆனால் நிறுவனம் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல்களை தீவிரமாக வழங்கி வருவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News